சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில இடங்களில் 26, 28 ரூபாவிற்கும் விற்கப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை | Good News Eggs Price Falls In Market Price Today

முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.