நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
உலக மதுவிலக்கு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுவதையடுத்து, இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மதுவிலக்கு தினம் அனுஷ்டிக்கப்படுவதால் குறித்த மதுபான கடைகளை மூடும் திட்டம் நாளை (03.10.2026) நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மதுவிலக்கு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மதுபானப் பயன்பாட்டில் மிதமான போக்கை ஊக்குவித்தல் மற்றும் மதுபானங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கலால் திணைக்களம்
மேலும், நாளைய தினம் மதுபான விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபான விற்பனை நிலையங்கள் மீண்டும் வழமையான முறையில் இயங்குவது தொடர்பான தகவல்கள் கலால் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் மதுபானப் பயன்பாடு காரணமாக உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானத்தின் தீங்கான பயன்பாட்டினால் ஏற்படும் உலகளாவிய சுகாதாரப் பாதிப்புகளை இது எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.