சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் யாழின் பிரபல சுற்றுலாத்தளம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் யாழின் பிரபல சுற்றுலாத்தளம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்து வரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் யாழின் பிரபல சுற்றுலாத்தளம் ; வெளியான அதிர்ச்சி தகவல் | Popular Jaffna Tourist Spot Turns Social Decay Hub

வேலணையில் அபிவிருத்தியையும், சுற்றுலா வலயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுலாவிகளுக்காக சுமார் 77 மில்லியன் செலவில் சுற்றுலா அமைச்சினால் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த மண்டைதீவு சுற்றுலாத்தளமாகும்.

ஆனால் அது முறையற்ற பொறிமுறையாலும் சரியான பராமரிப்பின்மையாலும் சபைக்கான வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன் எதிர்பார்த்த இலக்கை எட்டாது திட்டமும் முழுமையாகத் தோற்றுவிட்டது.

 கொள்வனவு செய்யப்பட்ட படகுகள் அதுசார் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் உரிய பராமரின்றி முழுமையாக சேதமாகிக் கிடக்கின்றது. மாறாக பல உபகரணங்கள் சூறையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளி இடங்களிலிருந்து சுற்றுலாவாக அல்லாது சமூக சீர்கேட்டை மையமாகக் கொண்டே அதிகமானோர் இங்கு வருவதாக பலரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

எனவே சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையத்தை தற்போது வர்த்தக நோக்குடன் பராமரித்து முன்னெடுக்கும் தனியாரிடமும் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் இழந்த வருமானத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.