சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த விலை மாற்றத்திற்கு நிகராக, சினோபெக் (Sinopec) நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் தமது எரிபொருள் விலையை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம் | Sinopec Makes Sudden Revision In Fuel Prices

இதன்படி, சினோபெக் நிறுவனத்திலும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலை தலா 2 ரூபாயால் குறைக்கப்பட்டு, முறையே 292 ரூபாய் மற்றும் 277 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெட்ரோல் 95 ஒக்டேன் (340 ரூபாய்) மற்றும் சுப்பர் டீசல் (323 ரூபாய்) ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.