போதைப்பொருள் விற்பனையில் தென்னிந்திய நடிகைகள் கைது ; பொலிஸாரின் அதிரடி

போதைப்பொருள் விற்பனையில் தென்னிந்திய நடிகைகள் கைது ; பொலிஸாரின் அதிரடி

சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் பிடித்தனர்.

போதைப்பொருள் விற்பனையில் தென்னிந்திய நடிகைகள் கைது ; பொலிஸாரின் அதிரடி | Famous South Indian Actresses Arrested In Drug

இவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தபெட்டமைன் கஞ்சா, போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 மதுபோதை தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட அஞ்சு கிருஷ்ணா தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2023ஆம் ஆண்டு வெள்ளிமலை என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஆரோ’ உள்ளிட்ட சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதேபோல துணை நடிகை வின்சி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். 

இந்தச் செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.