இலங்கையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

   இலங்கையில் இன்று (07) தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

இலங்கையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்! | Sudden Change In Gold Prices In Sri Lanka

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.