மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மக்களுக்குப் புதிய சுமை ; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மக்களுக்குப் புதிய சுமை ; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

புதிய மின்சக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மக்களுக்குப் புதிய சுமை ; சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு | Electricity Tariff Hike Poses New Burden To People

அரசாங்கத்தின் புதிய கொள்கையினால் மின்சாரக் கட்டணம் அதிகரித்து மக்கள் சுமைக்குள்ளாவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் மக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

நிலக்கரி மோசடிக்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.