வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு

வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு

வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று விழிப்புணர்வு  நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக  வித்தியாசமான முறையில்  இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து  ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞையில் இடம்பெற்றது.

இதன்போது சந்தியிலுள்ள சமிக்கையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

வித்தியாசமான முறையில் இவர்கள் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.