முதலமைச்சரின் நல்லாட்சிக்கு மதிப்பெண் போடுகின்ற நாள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பமாக வந்து தனது வாக்கை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* ஆட்சியின் சாதனைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நல்லாட்சிக்கு மதிப்பெண் போடுகின்ற நாள். ஆட்சிக்கு மக்களின் ஆதரவும் எழுச்சியும் இருக்கிறது.
* இந்த ஆட்சி பல மக்களை நாடி செல்லுகின்ற அரசாகும். அரசின் சாதனைகள் வீடுதோறும் சென்று கொண்டிருக்கிறது. அதன் பலனாக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
* இந்த ஆட்சி பல மக்களை நாடி செல்லுகின்ற அரசாகும். அரசின் சாதனைகள் வீடுதோறும் சென்று கொண்டிருக்கிறது. அதன் பலனாக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
* கடந்த ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திற்காக அரசு அலுவலகம் ஏறி மக்கள் கஷ்டப்பட்டார்கள்.
* ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசில் வீடு தேடி அரசு ஊழியர்கள், அலுவலர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு ஊராக சென்று மக்களை சந்தித்து திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
* முதலமைச்சர் மக்களை சந்திக்கக்கூடிய முதலமைச்சர். எளிமையாக சந்திக்கக்கூடிய முதலமைச்சராகவும் இருக்கிறார்.
* அனைத்து துறைகளின் திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.