நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 28,078 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 234 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன், 90 பேருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 109 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 77 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.