717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், "நீண்ட காலமாக இந்த கேள்விக்கு பதில் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்பொது செயல்பட்டிற்கு வந்துள்ளது. மிகவும் நல்லது இந்த செய்தி எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது மேலும் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது.
இந்த முடிவை செயல்படுத்தியதற்காக விஜய்க்கு வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
மீண்டும் ஒரு செய்தியாளர், திரைத்துறையில் இருந்து உங்களில் ஒருவராக இருந்த விஜய் இப்பொது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கமல், "மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கும், மக்களின் ஒருவராக இருக்க எந்த ஒரு துறையும் தடையில்லை. யார் வந்தாலும் மக்களின் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்வதையே அனைவரின் நோக்கம்.
மேலும் எங்கள் துறையிலிந்து ஒருவர் முதல்வராக இருப்பதில் எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.