வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட - கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆற்றில் படகினை செலுத்திக்கொண்டிருந்த நபரொருவர் நேற்று (14) காணாமல் போயிருந்தார்.

 காவல்துறையினர் விசாரணை

அந்த நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன நபரின் சடலம் இன்று (15) கரையொதுங்கியுள்ளது.

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு! | Man S Body Recovered From Valaichchenai River

செம்மண்ணோடை - பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.