’நேனு ரெடி’
பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி, ஹவிஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'நேனு ரெடி' (Nenu Ready) திரைப்படத்தின் மூலம் நேரடித் தெலுங்குத் திரையுலகில் கால்பதிக்கிறார்.
வெற்றிப் படங்களை இயக்கிய திரிநாத ராவ் நக்கினா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், நர்கிஸ் பக்ரி ஒரு விசேட பாடலுக்கு நடனமாடியுள்ளார். மெழுகுவர்த்திகள் சூழ்ந்த பிரம்மாண்டமான பின்னணியில், வெள்ளி நிற கிளாமர் உடையில் அவர் தோன்றும் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹார்னிக்ஸ் இந்தியா எல்எல்பி (Harniks India LLP) பேனரின் கீழ் கொனேரு சத்யநாராயணா மற்றும் நிகிலா கொனேரு தயாரிக்கும் இப்படத்தில், காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நகைச்சுவை ஜாம்பவான்கள் பிரம்மானந்தம், வெண்ணெலா கிஷோர் ஆகியோருடன் ஸ்ரீலட்சுமி, முரளி சர்மா மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிஜார் ஷாபி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் பிரம்மாண்டமான முறையில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், 'நேனு ரெடி' திரைப்படத்தை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.