சீரற்ற வானிலை - 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை - 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று (22) இந்த எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. 

அதன்படி கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.