றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா - கிளிநொச்சியில் பிரம்மாண்ட ஆரம்பம்
தமிழரின் தொன்மை மிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் வகையில் "றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" கிளிநொச்சி - இயக்கச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
“உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற நம் மூதாதையர் வாக்கிற்கு உயிர் கொடுக்கும் வகையில், அறுசுவையும் அள்ளித் தரும் இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7, 8, 9,10 ஆகிய நான்கு நாட்களும் றீச்ஷா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தாயகமும் புலமும் கைகோர்க்கும் தருணம்
இலங்கைத் தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் வாழும் நம் தமிழ் உறவுகளும் இந்த உணவுத் திருவிழாவில் பங்குபற்றவுள்ளனர்.

வடக்கு - கிழக்கின் பாரம்பரிய சுவையை தேடி புலம்பெயர் தமிழர்கள் பலர் தாயகம் நோக்கி பயணமாகியுள்ளனர். இது வெறும் திருவிழா அல்ல - தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையிலான சுவைப் பாலம்!
உலகளாவிய சமையல் கலைஞர்கள் இலங்கையின் புகழ்பெற்ற சமையல் வல்லுநர்களுடன் சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து, ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம் நண்டு பிரட்டல் வரை நாவூறும் பாரம்பரிய உணவுகளை பரிமாறவுள்ளனர்.
றீ(ச்)ஷாவின் பிரம்மாண்டமான உணவுத் திருவிழாவிற்கு Qick Food, IBC தமிழ், LANKASRI ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
சிறப்பம்சங்கள்
- 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்
- நேரடி சமையல் செய்முறை விளக்கங்கள்
- பனை, தென்னை சார்ந்த உணவுகளுக்கான தனி அரங்கு
- சிறுவர்களுக்கான பாரம்பரிய சிற்றுண்டி போட்டிகள்
- கலை கலாசார நிகழ்ச்சிகள் தமிழர் உணவு மரபின் தனித்துவத்தை, ஆரோக்கியத்தை, சுவையை ஒரே இடத்தில் அனுபவிக்க இது ஒரு அரிய வாய்ப்பு.
அட்சய பாத்திரம்போல அள்ள அள்ள குறையாத சுவையை ருசிக்க றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு வாருங்கள்!
நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள 077 777 2353 / 077 777 2354 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.
அனைவரும் வருக! சுவைத்து மகிழ்க!
