பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

 

விசேட ஆலோசனை

நிலவிய பலத்த மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.   

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Schools Closed Some Schools Today In Sri Lanka

இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.