மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு

மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.

 

செம்மணி புதைகுழிக்கு

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு | Chemmani Child Skeleton Excavation Postponed

குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள், நீதிமன்ற பதிவாளருக்கோ, சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள் சில வெளிப்படும்” என தெரிவித்துள்ளார்.