ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் பலி!
கலவான, வெத்தாக்கல பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த கயான் சதருவன் எனும் 16 வயதுடையவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் காவல்துறையின் மேலதிக விசாரணைப்படி இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவன் பலி
குறித்த சம்பவம் தொடர்பில் கலவான காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
