மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. பெங்களூரு விசிட் குறித்து உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்

மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. பெங்களூரு விசிட் குறித்து உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்

விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா என கேள்வி எழுப்பினார். 

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். 

தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி, காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா என கேள்வி எழுப்பினார். 

விஜய் பதில் 

இதற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசுகையில், "மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினோம்.

நாடாளுமன்ற விவகாரத்தில் மத்திய அமைச்சர் முழு விவரங்களை கூறவில்லை என்பதால் மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதினோம்.

காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.

காவிரி பிரச்சனையில் பெங்களூரு செல்ல விரும்பியது நான் தான். பக்கத்து நாட்டுடன் உள்ள பிரச்சனையே பேசி தீர்க்கும் போது பக்கத்து மாநிலக்காரர்களிடம் பேசி பார்க்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன்.

அதில் ஒருவேளை அவமானம் நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக தான் இருக்கேன் என தெரிவித்தேன்.

காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.

காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்" என தெரிவித்தார்.