100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் 100 ஆவது நாளை கடந்து 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்படடுள்ளன.

குறித்த அகழ்வு பணிகள் இன்றைய தினம் (08-08-2026) இடம்பெற்றுள்ளது.

இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

மனித புதைகுழி

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் (07-08-2026) 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு! | Chemmani Mass Grave Over 500 Skeleton Found

அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.