இன்றைய ராசி பலன் 6 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 6 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தொழில் வாழ்க்கையில் இருக்கும் முயற்சிகளில் நல்ல பலனைத் தரும். வாடிக்கையாளர்களை கவனிப்பது, திட்டங்களுக்கான காலக்கெடு நினைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம். இன்று உங்களுடைய கடின உழைப்பிற்கான பலன் உடனே கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். நிதிநிலை ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு உதவும். உங்களுடைய இனிய பேச்சுத் திறன் மற்றும் சிந்தனை மிக்க செயல்பாடு தேவைப்படும் நாள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆற்றலுடன் உணர்வீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்தை சோம்பலால் தள்ளி போடாமல் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முயற்சி செய்யவும். உங்களுடைய குடும்ப பொறுப்புகள் மற்றும் பொருள் சார்ந்த பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படவும். வேலை மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் நெகிழ்வு தன்மையுடன் செயல்படவும். நீண்ட கால நிதி நிலையை மனதில் வைத்து கவனமாக செயல்படவும். தேவையற்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். இன்று பணம் கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதை தவிர்க்கவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சில நாட்களாக இருந்த தடைகள், தாமதங்கள் விலகும். அதே சமயம் அபாயகரமான செலவுகளை எதிர்த்து, நிதி முன்னேற்றத்தை தரும் செயல்பாடுகளில் ஈடுபடவும். காதல் விஷயத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய இலக்குகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து துணையுடன் விவாதிப்பது நல்ல பலனை தரும். சிலருக்கு தொண்டை அல்லது ஜீரணம் தொடர்பான உடல் நல பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். குளிர்ந்த பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்கவும். உங்களுடைய பேச்சுத் திறன் மற்றும் தலைமைத்துவம் வலுவானதாக இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று திருமண தம்பதியிடையே இனிய பேச்சு மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்கள், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். தனிமையில் இருப்பவர்களுக்கு துணை கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளை நிதானம் மற்றும் கவனம் தேவை. சந்திராஷ்டம நாளில் என்பதால் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள், முதலீடுகள் போன்ற விஷயங்களை முடிந்தவரை தவிர்க்கவும். வல்லுனர்களின் ஆலோசனை பெற்று முக்கியம் முடிவுகள் எடுப்பது நன்மை தரும். சிலர்க்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். உங்கள் மன அமைதி பராமரிக்கும் முயற்சிக்கவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வெளிப்படையான நடவடிக்கை, திட்டமிடல் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். நிர்வாகப் பணிகள், நிதிநிலை ரீதியான திட்டம் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று ஊக முதலீடுகளை தவிர்க்கவும். பாதுகாப்பான இடத்தில் சேமிக்கவும். காதல் விஷயத்தில் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக பேசுவதும் முடிவு எடுப்பதும் நன்மை. தரும் இல்லையெனில் சிறிய பிரச்சினை கூட பெரிய புரிதலாக மாற வாய்ப்பு உண்டு. உங்களுடைய திரையின் நேரத்தை குறைத்துக் கொள்வதும், சரியான அளவு ஓய்வெடுத்துக் கொள்வது போன்ற ஆரோக்கியம் மேம்பாட்டில் கவனம் செலுத்தவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும், இன்று உங்களுடைய உடல் அதிகரிக்கும். குழுவாக செயல்பட்டால் நல்ல வெற்றி உருவாகும். இன்று செல்வாக்கு மிக்க நபர்களை சந்திப்பது, சாதகமான ஒப்பந்தங்கள் பெறுவது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். நிதி சார்ந்த விஷயங்கள் ஆதாயம் கிடைக்கும். இன்று சமூக செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். சுவாரசியமான ஒரு நபரை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஆற்றல் சிறப்பாக இருக்கும். மேலும் உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களை செய்ய தவறாதீர்கள்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக வளர்ச்சி ஏற்படும். உங்களுடைய அதிகாரம் சரியான விதத்தில் பயன்படுத்தினால், நன்மைகளும் அதேபோல பெறுவீர்கள். இன்று முக்கிய பணிகளை திட்டமிட்டால் முடிக்க முடியும். தொழில் தொடர்பாக ஏதேனும் ஆலோசனைக் கூட்டம் அல்லது திட்ட ஒப்புதல் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலையில் இருப்பவர்களுக்கு போனஸ் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்களுடைய வேலை பணம் அதிகமாக இருக்கும். அதனால் காதல் அல்லது திருமண வாழ்க்கைக்காக நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை பளு அல்லது வேலை தொடர்பான அழுத்தம் சற்று தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். அதற்காக உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக திட்டமிட்டு செயல்படவும். உங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய, உயர் கல்வி தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். அதே சமயம் நீங்கள் செய்யக்கூடிய முதலீடு, ஏதேனும் சொத்து வாங்கும் போது அதன் ஆவணங்களை கவனமாக ஆராயவும். உணவு தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்தினால், மன நம்பிக்கையை பலப்படுத்தவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. அது தொடர்பான திட்டமிடல், தொழில் தொடங்குவது, அதற்கான திட்டமிடுவது போன்ற ஆராயக்கூடிய விஷயங்கள் நம்மை தரும். உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்படு விஷயங்களில் ஏற்படும். குறிப்பாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு திட்டங்கள் மீது கவனம் செலுத்தவும். இது உங்கள் உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். ஆபத்தான முதலீடுகள் அல்லது கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். காதல் செய்வீர் உங்கள் உறவு மேம்படும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சிப்பூர்வமாக எதையும் அணுக வேண்டாம். இது உங்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனால் நீங்கள் இன்று எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் சரியான திட்டமிடல் மற்றும் நிதானம் தேவை. தொழில், வணிகம் செய்யக் கூடியவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் நீண்ட கால வளர்ச்சி உருவாகும். இன்று நுணுக்கமான விஷயங்களை கூட ஆராய்ந்து முதலீடு மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக மூலம், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் நலனை மேம்படுத்தும் விதமாக செயல்பாடுகளில் ஈடுபடுவது, உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். இன்று உங்கள் நிதிநிலை எப்படி இருந்தாலும் கடனை சரியாக நடக்க முயற்சி செய்யவும். வேலை தொடர்பாக புதிய பொறுப்புகள் இருப்பதை தவிர்க்கவும். உங்கள் குடும்பத்தின சிறிய அளவிலான ஆதரவு கிடைக்கும். இதனால் வேலை தொடர்பான அழுத்தங்களை சமாளிக்க இயலாமல் போகலாம். இருப்பினும் இன்று தைரியம், மற்றும் மன உறுதியுடன் செயல்படுவது அவசியம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய கட்டுக்கோப்பான ஒழுக்கம், திட்டமிட்ட செயல்பாடு நல்ல வெகுமதியை அளிக்கும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக பகுப்பாய்வு சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி உங்களைத் தேடி வரும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். இன்று வரவு செலவு திட்டங்களை மதிப்பாய்வு செய்து செயல்படவும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். குடும்பத்தின் சிறிய ஆதரவு கூட உங்களுக்கு மனதளவில் வலுவை தரும். விஷயத்தில் அக்கறை காட்டவும். சிலருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.