‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 9,181,696,250) வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 2,120,856,250) செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிதியை பயனாளிகள் நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.