நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

 

மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

திலீபனின் கோரிக்கைகள்

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...! | Thileepan 39Th Commemorative Event In Jaffna

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26 ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர் பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.