கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் வீழ்ந்த மாலுமி
கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.
கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (17) இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.