செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு

செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திட்டமிடப்பட்ட பேருந்து வழித்தடங்களைக் கொண்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'Lanka Metro Transit' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழித்தட வரைபடங்களில், கொழும்பின் முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் ஏழு சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்கள்

  • CM 01 – மாகும்புர முதல் புறக்கோட்டை வரை

செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு | Colombo Metro Bus Service Expansion

 

  • CM 02 – மில்லேனியம் சிட்டி முதல் கொழும்பு கோட்டை வரை
  • CM 03 – கடவத்தை முதல் மாகும்புர வரை
  • CM 04 – தெமட்டகொடை முதல் பாணந்துறை வரை
  • CM 05 – பத்தரமுல்லை முதல் ஏக்கல வரை
  • CM 06 – கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப் பாதை
  • CM 08 – கஹதுடுவ முதல் புறக்கோட்டை/SLIIT வரை

இந்த பேருந்து வலையமைப்பு மகரகம, நுகேகொடை, பத்தரமுல்லை, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கும்.

வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களில் ஒவ்வொரு வழித்தடத்தினதும் புவியியல் அமைவிடம், முக்கிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இணைப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், செப்டம்பர் மாத இறுதியில் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான குறிப்பிட்ட ஆரம்ப திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மேலும், பேருந்துகளின் சேவை frequency, கட்டணங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.