பரிகாரம் எனக்கூறி பெண்களுக்கு பா**லியல் தொல்லை

பரிகாரம் எனக்கூறி பெண்களுக்கு பா**லியல் தொல்லை

சேலம், வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா. 

இவர், குளிர்சாதனப்பெட்டி மற்றும் சலவை இயந்திரம் உள்ளிட்ட மின்சாதனங்களை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். 

மேலும், தான் ஆன்மிகவாதி என்றும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், அவரது கடைக்கு சென்ற சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். 

உடனடியாக பெற்றோர்கள் இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர். 

பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது, அவர் பரிகாரம் செய்வதாக கூறி, தன்னிடம் உதவி நாடி வந்த பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார் எனும் தகவல் பொலிஸாருக்கு கிடைத்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், விஜயராஜா பயன்படுத்திய மடிக்கணினியை கைப்பற்றி பொலிஸார் ஆய்வு செய்தனர். 

அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பாடசாலை சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதையடுத்து, மடிக் கணினி மற்றும் கைப்பேசியை பொலிஸார் பறிமுதல் செய்து, சைபர் குற்ற விசாரணை பிரிவின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில ஆண்டுகளாக பரிகாரம் செய்வதாக கூறி பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை பதிவு செய்து பெண்களை மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.