கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்!

கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக விசாரணை

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்! | Hand Grenade Attack Targeting A House In Colombo

சம்பவம் தொடர்பில் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.