அமெரிக்க இடைத் தேர்தலுக்காக 336 மில்லியன் டொலரை செலவிட்ட மஸ்க்
2026 அமெரிக்க இடைத்தேர்தலில், அமெரிக்க காங்கிரஸ் கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சியினர் தக்கவைத்துக்கொள்ள உதவும் வகையில், ஈலோன் மஸ்க் இதுவரை சுமார் 366 மில்லியன் அமெரிக்க டொலரை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயகக் கட்சியினருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையிலும், ஜூலை மாதத்திற்குப் பின்னர் மாத்திரம், அவர் 276 மில்லியன் அமெரிக்க டொலரை செலவிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் தகவல் வௌியிட்டுள்ளது.
முதன்முதலில் வெளியிட்ட இந்தத் தகவலின்படி, தேர்தல் நிதிப் பதிவுகளின் அடிப்படையில் உலகின் அதிபணக்காரரான மஸ்க், இந்த ஆண்டின் தேர்தல்களில் மிக அதிக அரசியல் நன்கொடை அளித்த தனிநபராக உருவெடுத்துள்ளார்.
விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பெற்றுள்ள அரசாங்க ஒப்பந்தங்கள் குறித்தும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் 'அரசாங்க சார்ந்த அவரது பணிகள் குறித்தும் விசாரணை நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளதால், இந்தத் தேர்தலில் மஸ்க்கிற்குப் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.
அதற்காகவே டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக மஸ்க் அதிக தொகையினை செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.