10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக முன்னதாக விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் புதுப்பித்துள்ளது.


அதன்படி, இன்று (13) பி.ப. 4 மணி முதல் நாளை பி.ப. 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என அந்த நிறுவகம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இவற்றில் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிகளில் மழை தொடருமாயின் மண்சரிவு மற்றும் தரை தாழிறங்கம் போன்ற நிலைமைகளுக்கான சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல, பசறை,

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க,

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கடுவான, வலஸ்முல்ல,

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, பாலிந்தநுவர,

கண்டி மாவட்டத்தின் ஹதரலியத்த, தும்பனை

கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, யடிநுவர, கேகாலை, அரநாயக்க, மாவனெல்ல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, ரம்புக்கனை, வரகாபொல,

மாத்தளை மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை, ரத்தோட்டை, மாத்தளை,

மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன, அத்துரலிய, பஸ்கொட

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த,

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, இம்புல்பே, களவானை, அயகம, நிவித்திகல குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.