சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் உட்பட இருவர் பலி!
பொலன்னறுவை, அரலகங்வில – எல்லேவெவ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கியதில், 5 வயது சிறுவன் உட்பட இருவர் நேற்று (23) உயிரிழந்துள்ளனர்.
மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இருவரையும் உடனடியாக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக அரலகங்வில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரும், ஜா-எல பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான 5 வயது சிறுவனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
காட்டு யானைகளிடம் இருந்து காணியைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இருவரையும் காப்பாற்ற முயன்ற மேலும் இருவர் மின்சாரம் தாக்கி பாதிப்படைந்த நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.