யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றை உடைத்து நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 15 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இல்லாத நேரத்தில், வீட்டை உட்புகுந்து 18 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், உதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

 

மேலதிக விசாரணை

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, கொள்ளையிடப்பட்ட நகைகளில் 15 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை | Jewelry Stolen After House Broken Into In Jaffna

கைது செய்யப்பட்ட இளைஞரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

GalleryGallery