யாழ்ப்பாணம் - KKS வீதியில் கோர விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - KKS வீதியில் கோர விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (22.10.2026) அதிகாலை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, இணுவில் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிங்கம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.  

 

மேலதிக விசாரணை

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.