வயலுக்குக் காவல் காக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த கதி!

வயலுக்குக் காவல் காக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (21-10-2026) இடம்பெற்றுள்ளது.

கரடியனாறு கொடுவாமடு பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய வல்லிபுரம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

பிரேத பரிசோதனை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விவசாயி கொடுவாமடு வயல் பிரதேசத்திலுள்ள தனது நெல் வயலுக்கு காவல் காப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு வீட்டில் இருந்து வயலுக்கு சென்று காவல் காத்துக் கொண்டிருந்துள்ளார்.

வயலுக்குக் காவல் காக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த கதி! | Farmer Killed In Batticaloa Elephant Attack

இதன்போது குறித்த வயல் பகுதிக்குள் யானை உள்நுழைந்த நிலையில் விவசாயி மீது தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.