இந்தியாவை தாக்கவுள்ள 'முரசு புயல்'

இந்தியாவை தாக்கவுள்ள 'முரசு புயல்'

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் வங்கக்கடலில் நாளை (23) உருவாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்ப குதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், தென் மாவட்டங்களில் மிககனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 26ஆம் திகதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புயலின் தாக்கம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது.

இது மேலும் வலுவடைந்து மேற்கு தென் மேற்கு திசையில் நகரும். இந்த நிகழ்வு தொடர்ந்து வலுப்பெற்று புயலாகவும் மாறுவதற்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கிறது. அந்த புயலின் தாக்கம் தமிழகத்துக்கு இருக்காது.

‘முரசு புயல்' தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (23) புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு ‘முரசு புயல்' என பெயர் சூட்டப்படும்.

வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை சூட்டும் குழுவிடம் இந்தப் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.