சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு

மொரட்டுவ, எகொடவுயன கடற்கரையில் சிறுவன் ஒருவரின் உடல் கரையொதுங்கிய நிலையில் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீவனபலான, தம்பார பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதாகக் கூறி குறித்த சிறுவன் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

 

கரையொதுங்கிய உடல்

அவர் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் நேற்று (26) காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எகொடவுயன கடற்கரையில் உடலொன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தததில் கரையொதுங்கிய உடல் காணாமல் போன சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது அவர் வீட்டிலிருந்து புறப்பட்டபோது எந்த உடையை அணிந்திருந்தாரோ அதே உடையில் இருந்துள்ளது.

 

பரீட்சைக்கு தோற்றவிருந்தவர்

இருப்பினும் அவர் கடலில் குளிக்கச் சென்றது தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு | Moratuwa Egodauyana 16Yrs Old Boy Body Discovered

குறித்த சிறுவன் எதிர்வரும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பான விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.