யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி மக்கள் தங்களது பிராந்திய அலுவலகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு இணையவழி சந்திப்பு முன்பதிவு வசதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், எதிர்வரும் 29ஆம் திகதி முதல், பொதுமக்கள் இந்த முறை மூலம் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பிட்ட இடங்களில் மட்டும்

அதன்படி, விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று ஒரு திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல் | Obtain Passport Announsment From Ied

கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் இந்தச் சேவை நடைமுறைப்படுத்தப்படும்.

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு இந்த முன்பதிவு முறை பொருந்தாது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.