அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு மக்கள் நலன்புரி உதவிகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், அரச ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இப் புதிய வரவு செலவுத் திட்டப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

அதிகமான மனுக்கள் 

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பணவீக்கம் மற்றும் அடிப்படை வாழ்வாதாரச் செலவுகளைக் கருத்தில் கொண்டு அரச துறை ஊழியர்களின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் அல்லது இடைக்காலக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சம்பள ஆணைக்குழுவிற்கு (Presidential Salary Commission) ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச ஊழியர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 12,000 இற்கும் அதிகமான மனுக்கள் மற்றும் முறையீடுகளைப் பரிசீலித்து இச் சம்பள உயர்வு தொடர்பான முதற்கட்ட யோசனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம் | Government Employees Salary Increment Announcement

அஸ்வெசும (Aswesuma) போன்ற சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கான நிதியுதவிகளை அதிகரிப்பதற்கும், தகுதி வாய்ந்த மேலும் பல குடும்பங்களை இத் திட்டத்தில் இணைப்பதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் நிலவும் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கான கொடுப்பனவுகளை சீரமைக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.