யாழ். சுன்னாகம் பகுதியில் துயரம் - வயலில் வேலை செய்து கொணடிருந்தவர் பலி

யாழ். சுன்னாகம் பகுதியில் துயரம் - வயலில் வேலை செய்து கொணடிருந்தவர் பலி

யாழ்ப்பாணத்தில் வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக நீரில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல் தனது வயல் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த வேளையிலேயே இந்த சம்பவம் சம்பவித்துள்ளது.

 

திடீரெனக் கால் வழுக்கி 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரெனக் கால் வழுக்கி அருகில் இருந்த நீர் தேங்கிய பகுதியில் தவறி வீழ்ந்துள்ளார்.

நீண்ட நேரமாக அவர் கரைக்கு வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக மரண விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் மரணம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.