செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை : அரச தரப்பின் அறிவிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை : அரச தரப்பின் அறிவிப்பு

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

 குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

அந்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை : அரச தரப்பின் அறிவிப்பு | Report Submitted Regarding The Chemmani Mass Grave

அதற்கமைய, அத்தரப்பினர் அவ்வறிக்கையை ஆராய்ந்து தமது கருத்துக்களையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைப்பார்கள்.

இதற்கு மேலதிகமாக, அப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் பழமையைக் கண்டறியும் கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பான தனது தீர்மானத்தையும் உத்தரவையும் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது“ என தெரிவித்தார்.