இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளுக்குப் புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
இலங்கையிலுள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்குப் புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்களுக்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதங்களை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கையளித்துள்ளார்.
அதற்கமைய களுபோவில, ராகம, மட்டக்களப்பு மற்றும் பேராதனை ஆகிய நான்கு போதனா வைத்தியசாலைகளுக்கும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும் இந்த புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பணிப்பாளர்கள் நியமனம்
களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை புதிய பணிப்பாளராக W.M.U.S. விஜேமான்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக D.A.K. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பேராதனை போதனா வைத்தியசாலை பணிப்பாளராக W.M.C.M. விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளராக W.A.P.P. ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.