புலம் பெயரும் திறமையான தொழிலாளர்கள்...! உலக வங்கி வெளியிட்ட தகவல்

புலம் பெயரும் திறமையான தொழிலாளர்கள்...! உலக வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க முயற்சிப்பதை விட அவர்கள் நாட்டில் தங்கவும் மீண்டும் நாடு திரும்பவும் தேவையான பொருளாதார மற்றும் சமூக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய மக்கள் விவகாரப் பணிப்பாளர் செம் மெட்டே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பணம் அனுப்புவதுடன் அறிவு, முதலீடு, தொழில்முறை தொடர்புகள் மற்றும் அனுபவங்களைத் தாய்நாட்டுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்கள் 

சரியான பொருளாதார மற்றும் சமூகச் சூழலை உருவாக்கினால் வெளிநாடுகளில் உள்ள திறமையான இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பி பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப உதவுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, புலம்பெயர்வை திறமையாளர்களின் இழப்பாக மட்டும் கருதாமல் அதன் நன்மை மற்றும் தீமைகளைச் சமநிலையாக அணுக வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.