மக்களுக்கு அவசர எச்சரிக்கை! குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை... திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!
இலங்கையின் பல பகுதிகளில் குறுகிய காலத்திற்குள் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக அல்லது குறுகிய நேரத்தில் பெய்யும் கனமழை காரணமாக ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் செல்வதையும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளைக் கடப்பதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.