காங்கேசன்துறையில் பரபரப்பு சம்பவம்!பொலிஸாரிடம் சிக்கியதும் கைதி எடுத்த அதிர்ச்சி முடிவு!

காங்கேசன்துறையில் பரபரப்பு சம்பவம்!பொலிஸாரிடம் சிக்கியதும் கைதி எடுத்த அதிர்ச்சி முடிவு!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அவரைத் தேடி மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் கைது செய்ய முற்பட்ட வேளையில், தன்னிடமிருந்த நஞ்சுப் பொருளை அருந்தியுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டதைத் தொடர்ந்து, வைத்தியசாலைக்குச் சென்று கைதியைப் பார்வையிட்ட நீதவான், அவரது விளக்கமறியலை நவம்பர் 20ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

தற்போது குறித்த கைதி பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.