புதிய பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட நிலை! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

புதிய பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட நிலை! இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பல்லேவெல - வெரகோட சாலையில் புிய பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இருவர் நேற்று இரவு வதுபிடிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெயாங்கொட பொலிசார் தெரிவித்தனர்

கும்பலோலுவ பகுதியில் வசிக்கும் இருவரே இதில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பலோலுவ பகுதியில் குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ஒருவர் அதை தடுக்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இடத்தை விட்டு வெளியேறிய அவர் மற்றுமொரு நபருடன் இணைந்து நெடுஞ்சாலையில் எம்.பி.யின் பயணத்தைத் தடுத்தபோது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது

தனக்கு எதிரான தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வெயாங்கொட பொலிசில் புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்தனர்.