காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது

காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது

கஞ்சா போதைப்பெருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை சிறு குற்றங்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்து விடுவிக்குமாறு கோரி தொம்பே காவல்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.சஞ்சீவவிற்கு 2 லட்சம் ரூபாய் கையூட்டல் வழங்க முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெகடன பகுதியில் ஒரு கிலோ கிரேம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்

இந்த நிலையில் அவரை விடுவிப்பதற்காக அவரது சகோதரரே இவ்வாறு காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முயற்சித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் களனி – பெதியாகொட பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.