
ஆசனங்கள் வெற்றிடமாக இருக்கும் - நாடாளுமன்ற செயலாளர் எச்சரிக்கை
ஸ்ரீலங்காவில் நாளை கூடவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகியவற்றின் நாடாளுமன்ற ஆசனங்கள் வெற்றியிடமாக இருக்கும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்க எச்ச்ரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளும் தமக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்திற்கான பெயரை இதுவரை பிரேரிக்காத நிலையில், 223 பேருடன் நாளையதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
ஸ்ரீலங்காவின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள நிலையில்,
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கான தலா ஒரு ஆசனம் வெற்றிடமான நிலையிலேயே நாளைய அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.