ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை
மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டது.
பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்ற போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த வருடத்தில் அடையவேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேநேரம், அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகளும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அது குறித்து கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025