ஐ.பி.எல். தொடரில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர்!

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர்!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக முதல்முறையாக அமெரிக்க வீரரொருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 29 வலக்கை வேகப்பந்து வீச்சாளரான அலி கான், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹரி கர்னி விலகுவதாக அறிவித்தார்.

அவர் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஐபிஎல் மற்றும் ரி-20 பிளாஸ்ட் ஆகிய இரு தொடர்களிலிருந்தும் விலகினார்.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக அலி கான், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அலி கான் பெற்றுள்ளார்.

அண்மையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த கரீபியன் பிரீமியர் லிக் ரி-20 தொடரில், சம்பியன் பட்டம் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் அலி கான் இடம்பெற்றிருந்தார். அவர் இந்த தொடரில் 8போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.