80, 90களின் பிரபல நடிகருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

80, 90களின் பிரபல நடிகருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 80ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். ’கரகாட்டகாரன்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ‘மேதை’ என்ற படத்திற்கு பின்னர் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் வீட்டிற்கு ஏசி மெக்கானிக் ஒருவர் வந்து அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்த்ததாகவும் அதன் பின்னர் திடீரென ராமராஜனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

நடிகர், இயக்குனர் மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்த ராமராஜன் கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.