மேலும் 331 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு வருகை

மேலும் 331 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு வருகை

வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்த 331 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருந்த  312 இலங்கையர்கள் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 2.55 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிரையம் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு ராச்சியம் சென்றிருந்த  19 இலங்கையர்கள்   அபுதாபியில் இருந்து இன்று  அதிகாலை 12.45 அளவில் நாடுதிரும்பியுள்ளனர்.

நாடுதிரும்பியுள்ள இலங்கையர்கள்  அனைவரும்  கொழும்பு தனியார் வைத்தியசாலை ஊழியர்களினால் விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கென ஹம்பாந்தோட்டை மற்றும் மாரவில பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மேலும் அக்கறைப்பற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.